மக்களுக்கான விதைகளை விதைத்து அறுவடைக்காக காத்திருக்கிறேன்!
ஏர்பூட்டி உணவளிக்கும் உழவர்களை போன்று சிறந்த விதைகளை விதைத்து நாட்டு மக்களுக்காக அறுவடைகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அனைவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
தைத்திருநாளை முன்னிட்டு அரசியல் பிரமுகர்களும், மதத் தலைவர்களும் வாழ்த்துச் செய்திளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘ நாட்டு மக்கள் அனைவரும் எமது தன்னிறைவுக்காக தளராது அனைவரும் கைகோர்த்து உழைத்திடும் இவ் பொன்னான திருநாளில் மகிழ்ச்சி பொங்க எனது வாழ்த்துக்களையும் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
எமது ஆரம்ப மகிழ்ச்சியும் நிலையான மாற்றத்திற்கு வித்திடட்டும். நமது பாரம்பரியமான வரலாற்றில் வரவேற்றல், விருந்தோம்பல் நன்றி செலுத்துதல் போன்றவற்றை நீண்ட நெடுங்காலமாக நாம் அனைவரும் பின்பற்றி வருகின்றோம்
நமது பாரம்பரியங்கள், இதிகாசங்கள், வரலாறுகளிலிருந்து பல்லின மற்றும் பன்மைத்துவ அடையாளங்களை நவீனயுக சந்ததியினர் கடைப்பிடித்துக்கொள்ளகூடிய வகையில் கலாசார நிகழ்வுகளினூடாக கூட்டு பரிமாணங்களை ஏற்படுத்தி அவற்றை நாம் அடைந்துகொள்ள எமது நடைமுறை செயற்பாடுகள் அமைய வேண்டும்.
மறை எண்ணங்களாக அன்றி ஒளிகதிர்கள் இந் நன்நாளிலிருந்து பரந்தளவில் ஒளி பரவட்டும். நமது எண்ணங்கள் சுவை பெறட்டும்’ என மேலும் தெரிவித்துள்ளார்.