//anjeng தமிழ் மக்கள் ஏக்கத்துடன் பொங்கலை கொண்டாடுகின்றனர்! | Mukadu

தமிழ் மக்கள் ஏக்கத்துடன் பொங்கலை கொண்டாடுகின்றனர்!

தமிழ் மக்கள் ஏக்கத்துடன் பொங்கலை கொண்டாடுகின்றனர்!

தமிழர்களுக்கு ஒரு நிரந்திர தீர்வு கிட்டாத ஏக்கத்துடனேயே இந்த பொங்கலை தமிழ் மக்கள் கொண்டாடிவருவதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று காலை தைப்பொங்கல் விழா ஆலய பங்கு மக்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

உலகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்ற விழாவாக அமைகின்றது. இறைவன் கொடுத்த விளைச்சலுக்காக நன்றி கூறுகின்ற நாளாக இந்த விழா அமைகின்றது.

இறைவன் தந்த நல்ல விளைச்சலுக்காக நன்றி கூறுகின்ற மனப்பான்மை தமிழர்களிடையே இருந்ததை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

எங்களுடைய நாட்டிலே இன்னும் தமிழர்களுக்கு நன்றி இல்லாமல் இருப்பதன் காரணம் இன்னும் எமக்கான ஒரு நிரந்தர தீர்வில்லை என்ற ஏக்கத்தோடு தான் இந்த பொங்கலை நாம் கொண்டாடுகின்றோம் என்பதால் ஆகும்.

எமக்கு ஒரு நிரந்தர தீர்வு எப்போது வரும் என நாம் ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த ஆண்டிலாவது நிலையான அமைதி, நிரந்தர தீர்வு புதிய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு அனைத்து இன மக்களும் மகிழ்ச்சியோடு வாழக்கூடிய நல்ல நாளை இறைவன் இந்த ஆண்டிலே தரவேண்டும்.

இந்த நிகழ்வில் பங்குமக்கள், அருட்தந்தையர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net