பொங்கல் பண்டிகைக்கு மோடி தமிழில் வாழ்த்து

பொங்கல் பண்டிகைக்கு மோடி தமிழில் வாழ்த்து

பொங்கல் பண்டிகைக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

மகர சங்கராந்தி, பொங்கல், மகுபிகு உள்ளிட்ட பண்டிகைகள் இன்று(புதன்கிழமை)) கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆங்கிலம் மட்டுமின்றி அந்தந்த மொழிகளில் தனித்தனியாக தனது ட்டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

தமிழில் அவர் பதிவிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில்,

“பொங்கல் திருவிழா நன்னாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துக்கள்.

இந்த நாள் நமது சமூகத்தில் மகிழ்ச்சி உணர்வையும், வளத்தையும் மேலும் கொண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். தேசத்திற்கு உணவளிக்கக் கடுமையாக உழைக்கின்ற நமது விவசாயிகளுக்கும் நாம் வணக்கம் செலுத்துகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 7423 Mukadu · All rights reserved · designed by Speed IT net