விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது!

விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவிக்கு குழந்தை பிறந்தது!

இந்தியாவின் ஒடிசாவில், விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவரும் 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

கடந்த சனிக்கிழமை குறித்த சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில் (திங்கட்கிழமை) அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடி என்னும் இடத்தில் மாநில பழங்குடியினர் மற்றும் கிராம மேம்பாட்டு அமைப்பின் சார்பில் உயர் நிலைப்பள்ளி ஒன்று செயற்பட்டு வருகிறது.

அங்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியின் விடுதியில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு அந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதை தொடர்ந்து விடுதி நிர்வாகிகள் அந்த மாணவியை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே நேற்றிரவு மாணவியும் குழந்தையும் பெர்ஹாம்பூர் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு குழந்தை இறந்துவிட்ட நிலையில், தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இவ்விடயத்தைத் தொடர்ந்து பள்ளியின் தலைமையாசிரியை ராதாராணி தலேய் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 3 உதவி பணியாளர்கள், 2 தாதியர்கள், 2 சமையற்காரர்கள், பெண் மேற்பார்வையாளர், உதவியாளர் ஆகியோரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

இச்சம்பவத்தினைத் தொடர்ந்து, கல்லூரியின் 3 ஆம் வருட மாணவனை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net