இரணைமடு குளத்தின் 99வது பொங்கல் விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இரணைமடு குளம் நீர்பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு 99 ஆண்டினை கொண்டாடும் வகையில் கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறிதத் பொங்கல் நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகின்றது.
இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து குறித்த பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது,
பொங்கல் நிகழ்வின் பிரதான பொங்கல் பானையினை வடமாகாண சபை முன்னால் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், முன்னால் வடமாாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆகியோர் பொங்கலிட வைத்தனர். தொடர்ந்து இரணைமடு விவசாயிகளினால் பொங்கலிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண முன்னால் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிடுகையில்,
இரணைமடு குளத்திலிருந்து யாழிற்கு நீர் கொண்டு செல்வதன் ஊடாக இரணைமடு குளத்தில் நீர் பற்றாக்குறையை தோற்றுவித்து, அதனுடன் மகாவலி ஆற்றை இணைத்து குளத்தை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கே பல முயற்சிகள் இடம்பெற்றன.
மன்னாரில் இவ்வாறானதொரு திட்டத்தின் ஊடாக பல குளங்கள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
யாழிற்கு நீர் தருவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு இல்லை. புதிய அரசியலமைப்பு வரைபில் ஒரு மாகாணத்திலிருந்து இன்னொரு மாகாணத்திற்கு நீர் எடுத்து செல்லப்படும்போது, மத்திய அரசின் கீழ் குளங்கள் பெறப்படாது, அவ்வந்த மாகாணமே நிர்வகிக்க கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டால் நாம் பரிசீலிக்க முடியுத் என தெரிவித்தார்.
இரணைமடு குளம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் , அக்குழு ஊடாக உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தாரர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பதவி ஏற்ற பின்னர் வடக்கு வருகையில், வானூர்தியில் பயணிக்கையில் இங்குள்ள இயற்கை தாவர வளங்களை பார்வையிட்டு பின்னர் உரையாற்றியதாகவும், அதன் பின்னே திட்டமிட்ட குடியேற்றங்கள், வன சுவிகரிப்புகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்
கருத்து தெரிவித்த பசுபதிப்பிள்ளை குறிப்பிடுகையில்,
இரணைமடு குளத்தின் அபிவிருத்தி தொடர்பிலும், யாழிற்கு குடிநீர் எடுத்து செல்ல கோத்தபாயா தலமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் , அது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.







