கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது கால் கோள் விழா
2019 இல் தரம் ஒன்றுக்கு சேர்ந்துள்ள மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா கிளிநொச்சி கல்வி வலயத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கல்வி வலயத்தில் தரம் ஒன்று வகுப்புக்கள் உள்ள 67 பாடசாலைகளில் கால்கோள் விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
இன்று (17) தரம் ஒன்றுக்கு புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை அந்தந்த பாடசாலைகளில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் மாலை அணிவித்து அழைத்து வந்துள்ளனர்.
பின்னர் மதத் தலைவர்கள், கல்வியலாளர்கள், அதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள் என பலர் மாணவச் சிறார்களின் கல்வி செயற்பாடுகளுக்கு ஆசி வழங்கினார்கள்.





