தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைத்திருநாள் பண்பாட்டு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி சாந்தபுரம் முதியோர் சங்கத்துடன் இணைந்து குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் அலுவலக ஊழியர்கள், முதியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது பண்பாட்டு ரீதியில் பொங்கலிடப்பட்டதுடன், முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.