பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது!

பாடசாலை மாணவியை தாக்கிய அதிபர் கைது!

வவுனியா ஓமந்தை நொச்சிக்குளத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையில் மாணவியினை தாக்கிய அதிபரை ஓமந்தை பொலிஸார் இன்று (18.01) மதியம் கைது செய்துள்ளனர்.

ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் பாடசாலை மாணவி மீது நேற்று முன்தினம் (16.01) பாடசாலையின் அதிபர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவி ஓமந்தை பொலிஸாரின் உதவியுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் குறித்த மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட பாடசாலையின் அதிபரை (43வயதுடைய) ஓமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

Copyright © 2440 Mukadu · All rights reserved · designed by Speed IT net