குடியரசு தினம்: சிறுவர்களுக்கு ‘தேசிய வீர தீர விருதுகள்’

குடியரசு தினம்: சிறுவர்களுக்கு ‘தேசிய வீர தீர விருதுகள்’

குடியரசு தினத்தை முன்னிட்டு 21 சிறுவர்- சிறுமிகளுக்கு ‘தேசிய வீர தீர விருதுகள்’ வழங்கப்படவுள்ளன

டெல்லியில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள குடியரசு தினத்தில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதன்போது பதக்கம், பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை குறித்த சிறுவர்- சிறுமிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் துணிச்சலான சாகச செயலுக்காக ‘தேசிய வீர தீர விருதுகள்’ வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றன.

பாரத் விருது, கீதா சோப்ரா விருது, சஞ்சய் சோப்ரா விருது, பாபு கைதானி விருது,பொது வீர தீர விருது என 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net