உலகின் அபூர்வ பொருள் ஒன்று மன்னாரில் கண்டுபிடிப்பு!

உலகின் அபூர்வ பொருள் ஒன்று மன்னாரில் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப் பழமையான கிராம்பு வகை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் – மாந்தையில் அகழ்வு ஆராய்ச்சியின் போது உலகின் மிகப் பழமையான கிராம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழமையான மாந்தை துறைமுகத்தில் மிகப்பெறுமதி வாய்ந்த கறுப்பு மிளகுகள் தொடர்பான சான்றுகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சர்வதேச ஆய்வாளர்கள் குழுவொன்று மாந்தை துறைமுகப் பகுதியில் அகழ்வாய்வில் ஈடுபட்டது.

இலங்கை தொல்பொருள் திணைக்களம், சீலிங்ஸ், மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொல்பொருள் நிறுவகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, கண்டுபிடிக்கப்பட்ட கிராம்பு, கி.பி 900 ஆம் ஆண்டுக்கும் 1100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக, ஆய்வாளர் Eleanor Kingwell-Banham தெரிவித்துள்ளார்.

இது ஆசியாவின் மிகப் பழைய கிராம்பு மாத்திரமல்ல, உலகிலேயே மிகப் பழமையான கிராம்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எட்டு மிளகுகள், கி.பி 600 தொடக்கம் 700 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net