//anjeng அமெரிக்கா ஆய்விற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி! | Mukadu

அமெரிக்கா ஆய்விற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி!

அமெரிக்கா ஆய்விற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினருக்கும் அனுமதி!

மன்னார் கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக கொண்டு செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக நேற்று (வௌ்ளிக்கிழமை) இந்த அனுமதி வழங்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனை செய்த நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.

மன்னார் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு எடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு “கார்பன்” பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை ஆய்வுக் குழுவினர் அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net