இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ள சம்பவம் மீனவ கிராமங்களில் பதற்றத்ததை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறை இடம் முறையான மீன்பிடி அனுமதி பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பாம்பன் பகுதியை சேர்ந்த ரியான் என்பவருக்கு சொந்தமான படகில் இருந்த வலைகள் போட்டு பலகைகள் ஜிபிஎஸ் கருவிகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், மீனவர் ரியான் மீது கடுமையான தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர்.

இதனால் மீன் பிடிக்காமல் ராமேஸ்வரம் கரை திரும்பிய மீனவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் கரை திரும்பிய நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க முடியாமல் பல லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

இந்த தொடர் தாக்குதலால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மத்தியில் பதற்றம்மான சுழ்நிலை நிலவி வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர் கூறுகையில்,

இப்பிரச்சினையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு முறையாக பேச்சுவார்த்தை நடத்தி நடுக்கடலில் சுமூகமாக மீனவர்கள் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் தொடர்ந்தால் நாங்கள் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என தெரிவித்தார்..

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net