சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

6 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்று (20) அதிகாலை பொதிகள் செய்யப்பட்ட நிலையில் வீதியில் வைத்திருந்த வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட நபர் எழுதுமட்டுவாள் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், வேறு நபர் ஒருவருக்கு கைமாற்ற நின்ற போதே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இளைஞர் கைதுசெய்யப்பட்ட

கைதுசெய்யப்ட்ட நபரை விசாரணைகளின் பின்னர் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் சாவகச்சேரி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net