யாழில் எம்.ஜி.ஆரின் 102 ஆவது பிறந்த தினம்!
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமசந்திரனின் 102ஆவது பிறந்த தினம் தினம் யாழில் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கதின் ஏற்பாட்டில் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்பாக 102ஆவது பிறந்ததின நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை(18) இடம்பெற்றது.
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தி அவரின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்தார்.
இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம்.சமூகசேவையாளர் மா.கருணாமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தனது சொந்த நிதியில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் வறியமக்கள்,மாற்றுதிறனாளிகள்,
பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு ஆடைகள், சிறு தொகை பணம் என்பவற்றையும் வழங்கிவைத்தார்.