படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு

படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலத்தில் படகொன்று ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு ஏனையோரை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம், கார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 20க்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள தீவில் அமைந்துள்ள ஒரு கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக படகில் சென்றுள்ளனர்.

தரிசனம் முடிந்து கலி ஆற்றின் வழியாக திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அந்தப் படகு ஆற்றில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கடலோரக் காவல்படையினர், அந்த இடத்துக்கு விரைந்து சென்று, கோவா வரையிலான கடல்பகுதிக்கு இடையில் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

தற்போதைய நிலவரப்படி 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net