மயிலிட்டியில் தைப்பூச நாளில் கடலில் இறக்கப்பட்ட வள்ளங்கள்!!

மயிலிட்டியில் தைப்பூச நாளில் கடலில் இறக்கப்பட்ட வள்ளங்கள்!!

வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட மீன்பிடி வள்ளங்கள் தைப்பூச நாளான நேற்று கடலுக்குள் இறக்கப்பட்டு, தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 13 கடற்றொழில் பயனாளிகளுக்கு கடந்த 18 ஆம் திகதி மீன்பிடி வள்ளங்கள் வழங்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட நிறுவனத்தால் வள்ளங்கள் வழங்கப்பட்டிருந்தன.

பிரதேச செயலர் ச.சிவசிறியினால் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்ட வள்ளங்கள் நேற்று தொழிலுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net