நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

நடேசனின் இரண்டு நூல்கள் யாழ்ப்பாணத்தில் வெளியீடு

புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளரும் மருத்துவருமான நடேசனின் ‘எக்ஸைல்’ (ஈழப்போராட்ட கால அனுபவங்களின் தொகுப்பு) வெளியீடும் ‘கானல் தேசம்’ (நாவல்) அறிமுகமும் 25.01.2019 மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண நகரில் உள்ள றிம்மர் மண்டபத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை விரிவுரையாளர் திரு. மகேந்திரன் திருவரங்கன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் விமர்சனவுரைகளை ஊடகவியலாளர் பூபாலரட்ணம் சீவகன், கிரிஷாந், யதார்த்தன், எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹஸீன் ஆகியோர் ஆற்றுகின்றனர்.

நூல்களை டான் தொலைக்காட்சிக் குழுமத்தின் தலைவர் குகநாதனும் எழுத்தாளர் க. சட்டநாதனும் வெளியிட்டு வைக்கவுள்ளனர்.

நிகழ்வில் பங்கேற்று உரையாடல்களை நிகழ்த்துமாறு நண்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறையினர், கவிஞர்கள், வாசகர்கள் அனைவரையும் மகிழ் வெளியீட்டகத்தினர் கேட்கின்றனர்

Copyright © 1324 Mukadu · All rights reserved · designed by Speed IT net