போதை அது சாவின் பாதை! வவுனியாவில் கவனயீர்ப்பு

போதை அது சாவின் பாதை! வவுனியாவில் கவனயீர்ப்பு

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு ஊர்வலம் பாடசாலையின் அதிபர் ரம்சீன் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்துரைகளை தொடர்ந்து முஸ்லிம் மகாவித்தியாலய முன்றலில் இருந்து குருமன்காடு சந்திவரை ஊர்வலம் சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்துள்ளது.

போதை நாட்டுக்கு கேடு அதை ஒழிக்க ஒன்றிணைவோம், எதிர்கால சந்ததியை வளர்க்க போதையை தடை செய், போதை அது சாவின் பாதை போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நகரசபை உறுப்பினர்களான அப்துல் பாரி, எம்.லிரீப் மற்றும் கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Copyright © 3402 Mukadu · All rights reserved · designed by Speed IT net