வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய தூதுவர்!

வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய தூதுவர் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு யாழ்.கைதடியிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

எனினும் குறித்த செய்தியை சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Copyright © 7008 Mukadu · All rights reserved · designed by Speed IT net