வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் திரைநீக்கம்!

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் திரைநீக்கம்!

வவுனியா – இலுப்பையடி பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்திரிகர்கள் விடுதி இன்று முதல் பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக பௌத்த யாத்திரிகர்கள் விடுதி என்ற பெயரில் செயற்பட்டு வந்துள்ள குறித்த நிலையம் இன்று முதல் அவசர அவசரமாக புனரமைப்பு செய்யப்பட்டு பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் புனரமைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலை சுற்றுவட்டம், இலுப்பையடி போன்ற பகுதிகளில் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6768 Mukadu · All rights reserved · designed by Speed IT net