தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அரசாங்கம் முயற்சி!

தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அரசாங்கம் முயற்சி!

தொல்பொருள் திணைக்களத்தினூடாக தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க இலங்கை அரசாங்கம், பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு இந்த விடயம் இனவாதத்தை தூண்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டமை தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு சிறந்த உதாரணம் என்பதோடு, இவை நீதிக்கு எதிரான செயற்பாடுகளெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 3957 Mukadu · All rights reserved · designed by Speed IT net