விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டால் ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது!

விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டால் ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது!

“வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது. அவர் எங்களுக்கு ஒரு சவால் அல்ல.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“வடக்கு மாகாண சபை முறையாக இயங்கவில்லை. அதனை நான் ஏற்கிறேன். இனி அதனை நாங்கள் சரியாகக் கையாள்வோம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net