மன்னாரில் வயோதிபரின் சடலம்!

மன்னாரில் வயோதிபரின் சடலம்!

மன்னார் சௌத்பார் பிரதான வீதி , சாந்திபுரம் உப்பளம் பகுதியில் வயோதிபர் ஒருவருடைய சடலத்தினை மன்னார் பொலிஸார் இன்று சனிக்கிழமை காலை (26) மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் பனங்கட்டிக்கோட்டு கிராமத்தை வதிவிடமாக கொண்ட கதிர்காமநாதன் அருளானந்தன் (வயது-82) என அவரது மகனால் அடையாலம் காணப்பட்டுள்ளார்.

குறித்த வயோதிபர் நேற்று வெள்ளிக்கிழமை(25) இரவு வீட்டிலிருந்து சென்ற நிலையிலே இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அப்பகுதியால் சென்றவர்கள் சடலத்தை கண்டு மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையிலே மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த வயோதிபரின் மரணம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © 2914 Mukadu · All rights reserved · designed by Speed IT net