வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் தமிழரின் பாரம்பரிய வேள்வி திருவிழா
தமிழரின் பாரம்பரிய வேள்வி திருவிழா இன்று அதிகாலை வட்டுவாகல் பகுதியில் நடைபெற்றுள்ளது.
நந்திக்கடல் பெருங்கடலுடன் சங்கமிக்கும் வெட்டுவாய்கால் பகுதியில் ஆண்டாண்டு காலமாக அப்பகுதி மக்கள் இந்த வழிபாட்டு நிகழ்வை மரபு வழியாக நிகழ்த்தி வந்துள்ளனர்.
எனினும் வட்டுவாகல் மக்களின் மரபுவழி வழிபாட்டு பகுதியை 2009 ஆண்டு இலங்கை கடற்படை மற்றும் தரை படையினர் ஆக்கிரமித்தனர்.
இதனால் இறுதி யுத்தத்தின் பின்னர் அப்பகுதி மக்கள் குறித்த வழிபாட்டு நிகழ்வை வெவ்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அதிகாலை இந்த வேள்வி திருவிழா வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் நடைபெற்றுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் தமது மரபு வழிபாட்டு தளத்தை விடுவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.