அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் பயன்பாட்டிற்க்கு.

கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

இன்று பகல் 1 மணியளவில் கொழும்பில் இருந்து புறப்பட்ட உத்திராதேவி புகையிரதம் முதல் முதலாக குறித்த புகையிரத நிலையத்தில் தரித்தது.

குறித்த புகையிரத்தில் வருகை தந்திருந்த அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்களை வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் இந்திய துணை தூதுவர் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், அமைச்சர் நினைவு கல்லினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் பிரயாண சீட்டினையும் வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், யாழ் இந்திய துணை தூதுவர், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வடமாகாண ஆளுநர் தமிழ் மற்றும் சிங்களத்தில் கருத்து தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சரும் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து அமெரிக்க விமானம் தொடர்பான தகவலை அமைச்ரிடம் வினவியபோது. குறித்த விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை எனவும்,நீங்கள் கூறிய இவ்விடயம் தொடர்பில் தான் ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © 4961 Mukadu · All rights reserved · designed by Speed IT net