யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது புதிய உத்தரதேவி ரயில்!

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது புதிய உத்தரதேவி ரயில்!

கொழும்பிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி ரயில் பிற்பகல் 2.40 மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது.

இந்த ரயிலில் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், ரயில் நிலைய அதிகாரிகள், எனப் பலரும் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ரயிலினை தமிழரசுக் கட்சியின் தலைவர் மவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் யாழ்.பிரதான ரயில் நிலையத்தில் வரவேற்றனர்.

இந்த வரவேற்பு நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை கிளிநொச்சி – அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.

இன்று காலை 11 மணியளவில் கொழும்பில் இருந்து புறப்பட்ட உத்தராதேவி ரயில் முதன்முதலாக குறித்த ரயில் நிலையத்தில் தரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 1874 Mukadu · All rights reserved · designed by Speed IT net