ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு கோரிக்கை!
இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடியைப் பறக்கவிடுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய அனைத்து இல்லங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மற்றும் வாகனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள ஒத்திகை நடவடிக்கைகள் காரணமாக நாளை மறுதினம் முதல் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
நாளை மறுதினம் காலை 7 மணி முதல் 12 மணி வரை ஒத்திகைகள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை, காலை 7 மணி முதல் பிற்பகல் மணி வரை ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன.