பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடை சாய்வு

பூநகரியில் கொள்கலன் பாரவூர்தி குடை சாய்வு

இன்று காலை 8 மணியளவில் யாழ் நோக்கிச் சென்ற பாரவூர்த்தி பூநகரி தனங்கிளப்பு பகுதியில் வீதியை விட்டுச் சென்று குடை சாய்ந்துள்ளது எனினும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கொள்கலன் பாரவூர்தி ஒன்று பூநகரி தனங்கிளப்பு பகுதியில் சென்றபோது பாரவூர்தியின் டயர் காற்றுப்போனதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்தள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

எனினும் இவ்விபத்தில் பாரவூர்தியில் சென்ற சாரதி உட்பட எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சாவச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net