வவுனியா உபநகரபிதாவை அவமதித்த பொலிஸ் அதிகாரி!

வவுனியா உபநகரபிதாவை அவமதித்த பொலிஸ் அதிகாரி!

வவுனியா உபநகரபிதா குமாரசுவாமி அவர்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அவமதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பம்பைமடு பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபையின் குப்பை ஏற்றும் வாகனங்களை புதிய சாலம்பைகுளத்தை சேர்ந்த இஸ்லாமிய சமூகத்தினர் சிலர் வழிமறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திப்பதற்கென நகரபிதா மற்றும் உபநகரபிதா ஆகியோர் சென்றிருந்த வேளை நகரபிதா மற்றும் பிரதேச சபை தலைவர் மாத்திரமே உட்செல்ல அனுமதி வழங்க முடியும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் உபநகரபிதாவை தடுத்து நிறுத்தினார்.

இதேவேளை நான் உபநகரபிதா நகர சுகாதார பிரிவிற்கும் நானே பொறுப்பு என கூறவும் குறித்த அதிகாரி கடும் தொணியில் உங்களுக்கு ஒருமுறை கூறினால் விளங்காதா உள்ளே வரமுடியாது என கூறி தன்னை அவமதித்துள்ளதாக உபநகரபிதா தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக தான் உயரதிகாரிகளிடம் தான் முறையிட உள்ளதாகவும் உபநகரபிதா தெரிவித்துள்ளார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net