கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை!

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை!

கிளி­நொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்­குத்­துக்கு இலக்­கான நிலை­யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பூந­க­ரி­யில் உள்ள ஒரு­வ­ருக்கு வழங்க வேண்­டிய பணத்தை மோட்டார் சைக்­கி­ளில் எடுத்­துச் சென்­றுள்­ளார். அவ­ரைத் திடீ­ரென வழி­ம­றித்த இரு­வர் அவ­ரி­டம் இருந்து பணப் பையைப் பறிக்க முயன்­றுள்­ள­னர்.

அவர் அதைத் தடுக்க முயன்­ற­போது கத்­தி­யால் குத்­தி­விட்­டு பணத்தை அப­க­ரித்­துக் கொண்டு தப்­பிச் சென்றுள்ளனர்.

எனினும் 19 இலட்­சம் ரூபா பணத்­தை கொள்ளையடித்துச்சென்றுள்ளதாக பெண்ணின் கண­வர் தெரிவித்துள்ளார்.

வயிற்­றுப் பகு­தி­யில் இரு தட­வை­கள் கத்­தி­யால் குத்திவிட்டு, கொள்­ளை­யிட்­ட­வர்­கள் கத்­தியை அவ­ரது வயிற்­றில் சொருகியவாறு விட்­டு தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

வயிற்­றில் கத்தி குத்­தப்­பட்ட நிலை­யில் வீதி­யில் விழுந்து கிடந்த பெண்ணை அந்­தப் பகு­தி­யால் வந்த மீன் வியா­பாரி ஒரு­வர் அவ­தா­னித்­துள்­ளார். அவர் உட­ன­டி­யா­க நோயா­ளர் காவு வண்­டிக்­கும், பொலிஸாருக்கும் தக­வல் கொடுத்­துள்­ளார்.

இவ்வாறு மீட்­கப்­பட்­ட பெண்ணை கிளி­நொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்­லப்­பட்­டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இச்சம்­ப­வம் தொடர்­பிலான மேலதிக விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்கொண்டு வரு­கின்­ற­மை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net