“ஞானசார தேரரின் பணியை தொடர ஜனாதிபதி அனுமதிக்க வேண்டும்”

நாட்டில் காணப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதம், விடுதலைப் புலிகள் அமைப்பு சார்ந்த அச்சுறுத்தல்கள், கிறிஸ்தவ மதத்திற்கு ஏனைய மதத்தவர்கள் மதமாற்றம் செய்யப்படல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குரல் கொடுத்து, அவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில் செயற்பட்டுவந்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி, அவரை தொடர்ந்தும் நாட்டிற்காக செயற்பட அனுமதிக்க வேண்டும் என சிங்கள ராவய, ராவண பலய மற்றும் சிங்களே அமைப்புக்கள் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிங்கள ராவய, ராவண பலய மற்றும் சிங்களே ஆகிய அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டது.