பெருமைக்காக எந்த சேவையும் மக்களுக்கு செய்யவில்லை!
நாம் பெருமைக்காக எதனையும் செய்யவில்லை. மக்களின் நலனை கருத்திற்கொண்டே செயற்படுகின்றோமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
“விமானம் வராத விமான நிலையங்கள், மக்கள் பயன்படுத்தாத மண்டபங்கள் , கிரிக்கெட் விளையாடாத கிரிக்கெட் மைதானங்கள் என பெருமைக்காக எதனையும் நாம் அமைக்கவில்லை.
இவ்வாறு மக்களுக்கு பயன்படாத கட்டங்களை கட்டி பணத்தை வீணடிக்கவில்லை. மாறாக அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றோம்.
இதேவேளை சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாாளராக நிறுத்த எதிரணி தயாராகி வருகின்றது.
மேலும் இத்தகையவரை சிறந்த முகாமைத்துவ நிபுணர்களென கூறுகின்றனர். ஆனால் இவர்களினாலேயே விமான சேவை நாசமாக்கப்பட்டது” என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.