யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!!

யாழில் பெண்ணைக் கடத்த முற்பட்ட நபருக்கு தர்ம அடி!! நபர் காவல்துறையினரிடம் ஒப்படைப்பு!

யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை மடக்கிப் பிடித்ததுடன் கடத்தல் காரனுக்கு தர்ம அடியும் போட்டுள்ளனர்.

அத்துடன் காவல்துறையினரை வரவழைத்து குறித்த நபரை ஒப்படைத்துள்ளனர் மக்கள்.

ஏற்கனவே நாவாந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த போது, குறித்த பெண் நபரின் கையைக் கடித்து விட்டுத் தப்பித்தார்.

பெண்ணின் அவலக்குரல் கேட்டு பொதுமக்கள் கூடவே கடத்தல் காரன் அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் கடத்த முயற்சித்த நபரது உந்துருளி இலக்கத்தை அவதானித்திருந்தனர்.

இன்று அதே இடத்துக்கு வருகை தந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடியும் போட்டு காவல்துறையினரிடம் கையளித்துள்ளனர் அப்பகுதி மக்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net