விடுதி குளியலறையில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்!

விடுதி குளியலறையில் எரியூட்டப்பட்ட நிலையில் சடலம்!

அங்கொட – முல்லேரியாவ, நவகமுவ பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றின் குளியலறையில் எரியூட்டப்பட்ட நிலையில், அடையாளம் காணப்படாத நபரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

விடுதியில் இரண்டு பேர் தங்கியிருந்ததாகவும் அவர்களில் ஒருவர் இன்று காலை புறப்பட்டுச் செல்வதை விடுதி ஊழியர்கள் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதியில் தங்கியிருந்த இவர்களின் அடையாள அட்டைகளை கூட விடுதி முகாமையாளர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net