யாழில் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு!

யாழில் மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எதனோல் கொள்கலன்கள் அளிப்பு!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் சுமார் ஏழாயிரம் லிட்டர் எதனோல் அடங்கிய சுமார் 331 கொள்கலன்கள் இன்று (30)கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக ஊற்றி அளிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியில் கடந்த 24 ஆம் திகதி விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட பரிசோதனையின் பொழுது சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்காக பயன்படுத்தவிருந்த 7000ஆரயிரம் லீற்றர் எதனோல் அடங்கிய சுமார் 330 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி இரண்டரைக் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விசேட அதிரடி படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவலைப்பின் பொழுதே குறித்த சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் இருவரையும் அதிரடி படையினர் அண்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட மதுவரி திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மா. கனேசராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப் பட்டதையடுத்து குறித்த இருவரையும் 31ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதே வேளை சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட சுமார் ஏழாயிரம் லிட்டர் எதனோல் அடங்கிய சுமார் 331 கொள்கலன்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதி மண்றப் பதிவாளர் மற்றும் அதிரடிப் படையினர் பொலிஸார் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் உமையாள் புரம் பகுதியில் ஊற்றி அளிக்கப்பட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net