கிளிநொச்சியில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடைமையாகி வருவதாக..

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடைமையாகி வருவதாக கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவர் ஜெயராஜா இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனையில் மாணவர்கள் அதிகம் ஈடுபடுவது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிளிநாச்சி மாவட்டத்தின் நகர் புற பாடசாலைகள் சிலவற்றிற்கு அண்மை நாட்களாக சென்று போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புனர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டபோது, குறித்த விழிப்புனர்வு கருத்துக்களை மாணவர்களிற்கு எடுத்து கூறிய பின்னர் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாணவர் மத்தியில் போதைப்பொருள் பாவனை இடம்பெற்ற வருகின்றமை தொடர்பில் தகவல்களை திரட்ட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை போதைப்பொருள் பாவனை தொடர்பில் தன்னிடம் உள்ள பாவனையாளர்களான மாணவர் மத்தியில் ஆய்வு செய்தபோது, மாணவர் மத்தியில் போதைப்பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், அவற்றை பெற்றக்கொள்ள மாணவர்களிற்கு பெற்றோர் பணம் வழங்காத நிலையில், விற்பனையாளர்களாக மாற்றப்படுவதாகவும் வைத்தியர் தனது ஆய்வில் கண்டு கொண்டதாக தெரிவித்தார்.

சில மாணவர்கள் வகுப்பறையிலேயே போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாக கிடைத்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த வைத்தியர், அதிக வருவாய் குறித்த போதைப்பொருளை மாணவர் மத்தியில் பரப்பியமையால் சிலரால் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கஞ்சா, போதையை ஏற்படுத்தம் ஒரு வகையான பாக்கு என மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த போதை பொருட்களை சிலர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதாகவும், மேலும் சிலர் நானும் பயன்படுத்தலாமா? இல்லையா என்ன அரை மன நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, திணைக்களங்கள், அதிகாரிகள் மௌனமாக உள்ளர் என்ற நிலைப்பாட்டை விடுத்து, பெற்றோர், சமூகம் என பலரும் விழிப்புடன் செயற்பட்டால் வெற்றி காண முடியும் உனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மாணவர்கள் விடயம் தொடர்பில் ஆசிரியர்கள், பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த போதைப்பொருள் அறிமுகம் யாரையும் இலக்கு வைத்து பரப்பப்படவில்லை எனவும். வியாபார நோக்கத்திற்காகவே மாணவர் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த வைத்தியர் குறித்த விடயம் தொடர்பில் மாணவர் குறிப்பாக விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையுடன் மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களில் மாணவர்கள் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டால், பல்கலைக்கழக அனுமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், மாணவர்கள் இவ்வாறான பழக்கங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும் எனவும் இதன்போது மாணவர்களிற்கும், பெற்றோருக்கும் வைத்தியர் ஆலோசனை வழங்கினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net