வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ‘மகாவித்தியன்கள் தினம்’

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் மகாவித்தியன் தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இப் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களையும் மீண்டும் பாடசாலையில் அணிதிரட்டும் நோக்குடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ள பழைய மாணவர் சங்கமானது ‘மகாவித்தியன்கள் தினம்’ எனும் பெயரில் அதனை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இந் நிகழ்வானது 2019-02-03 ஆந் திகதி காலை 8:00 மணிக்கு பாடசாலையிலிருந்து நடை பவனியுடன் ஆரம்பித்து நகர் வழியினூடாக சென்று நடை பவனியானது மீண்டும் பாடசாலையை வந்தடையவுள்ளது.

அதனையடுத்து பழைய மாணவர் அணிகளுக்கிடையேயான மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் உட்பட்ட சிநேகபூர்வ விளையாட்டு போட்டி நிகழ்வுகளும், பிள்ளைகளுக்கான விநோத விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வுகள் அன்றைய தினம் மாலை வரை பாடசாலையில் இடம்பெறவுள்ளது.

இப் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றுசேர்ந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு உரமூட்டும் இந்த நிகழ்வில் அனைத்து பழைய மாணவர்களையும் தங்கள் குடும்பத்துடன் கலந்து சிறப்பிக்குமாறு பழைய மாணவர் சங்கம் கோரியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net