வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண திறைசேரியிடம் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

  • 2013 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,
  1. அபிவிருத்திக்கு 618 மில்லியன் ரூபாய்,
  2. பிரமாண கொடைக்காக 195 மில்லியன் ரூபாய்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 310 மில்லியன் ரூபாயும்,
  4. யுனிசெப் திட்டத்தில் 188.05 மில்லியன் ரூபாயும்,
  5. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 28 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 2014 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,
  1. அபிவிருத்திக்கு 908 மில்லியன் ரூபா,
  2. பிரமாண கொடைக்காக 1280 மில்லியன் ரூபாய்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 286.47 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 180 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 50.98 மில்லியன் ரூபாயும்,
  6. 1000 பாடசாலை செயற்திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 2015 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,
  1. அபிவிருத்திக்கு 1440 மில்லியன் ரூபா,
  2. பிரமாண கொடைக்காக 400 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 335.61 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 355 மில்லியன் ரூபாயும்
  5. யுனிசெப் 16.43 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,
  1. அபிவிருத்திக்கு 1800 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 437 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 289 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 365 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
  6. சிறந்த பாடசாலை 685.35 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,

  1. அபிவிருத்திக்கு 3620.50 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 605.70 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 252 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 360 மில்லியன் ரூபாயும்,
  5. யுனிசெப் 7.81 மில்லியன் ரூபாயும்,
  6. அருகிலுள்ள சிறந்த பாடசாலை ஆயிரத்து 153 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • 2018 ஆம் ஆண்டு மத்திய அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டுநிதியூடாக,
  1. அபிவிருத்திக்கு 1300.00 மில்லியன் ரூபாயும்,
  2. பிரமாண கொடைக்காக 350 மில்லியன் ரூபாயும்,
  3. பாடசாலைக் கல்வியை ஒரு அறிவு மையமாக பரிணாமம் பெறச் செய்யும் செயற்திட்டத்திற்காக 79 மில்லியன் ரூபாயும்,
  4. சுகாதாரத்துறை அபிவிருத்திக்கு 324.80 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இவ்வாறு 17 ஆயிரத்து 256. 15 மில்லியன் ரூபாய் வடக்கு மாகாணத்தின் கடந்த ஜந்தாண்டு கால அபிவிருத்திக்காக மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத் தகவல்கள் யாவும் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் ஊடாக மாகாண திறைசேரி தகவல் அலுவலரிடமிருந்து தகவலறியும் உரிமை சட்டம் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள் ஆகும்.

இதேவேளை, மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு தருவதாக அறிவிக்கப்பட்ட நிதியில் பெரும் பகுதி நிதி வழங்கப்படுவதில்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், ஒதுக்கீடு செய்யப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை என்று மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net