தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு நினைவேந்தல்.

தம்பலகாமம் படுகொலையின் 20 ஆண்டு திருகோணமலையில் நினைவேந்தப்பட்டது.

திருகோணமலை தம்பலகாமத்தில் 1998ம் ஆண்டின் இன்றைய நாளில் காவல்துறையினரால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் உட்பட எட்டுத் தமிழர்களின் 20வது ஆண்டு நிறைவு நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பட்டில் நினைவேந்தப்பட்ட்து.

கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செ கயேந்திரன் திருகோணமலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கைவிடப்பட்டிருந்த இடுகாட்டின் தூபிகள் புனர்நிர்மாணிக்கப்பட்டு இந்நினைவேந்தலை நடாத்தத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திருகோணமலை கிளையினர் நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net