தலைக்கவசம் அணிந்து கிண்ணஸ் சாதனை!

தலைக்கவசம் அணிந்து கிண்ணஸ் சாதனை!

வீதி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சுமார் 5000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தலைக்கவசம் அணிந்து உலக கிண்ணஸ் சாதனையொன்றை படைத்துள்ளனர்.

குறித்த விழிப்புணர்வு செயற்பாடு மும்பையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும்போது அதிகளவான விபத்துக்களை தடுக்க முடியுமென ஆரஞ்சு நிறத்திலான தலைக்கவசங்களை சிறுவர்கள் அணிந்து வலியுறுத்தினர்.

மும்பை வீதியில் அமர்ந்து வீதி பாதுகாப்பு தொடர்பில் வலியுறுத்தி கோஷங்களை அச்சிறுவர்கள் எழுப்பினர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், அவர்களின் தகவலை ஏற்றுக்கொண்டார்.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1070 பங்கேற்பாளர்களால் நடத்தப்பட்டிருந்த வீதி பாதுகாப்பு தொடர்பான பழைய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net