யாழிலிருந்து கொழும்பு நோக்கி மாற்றுத்திறனாளி பயணம்!
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி மாற்று திறனாளி ஒருவர் மூன்று சில்லு துவிச்சக்கர வண்டியில் பயணமொன்றை ஆரம்பித்துள்ளார்
தமிழ் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் குறித்த பயணம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில் கொழும்பு நோக்கிச் செல்லும் மாற்றுத்திறனாளியான மௌஹமட்அலி என்ற இளைஞன், கொழும்பிலிருந்து இதர பகுதிகளுக்கும் சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணிக்கவுள்ளார்.



இலங்கையில் சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் உருவாக்கப்படவேண்டும், மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என வலியுறுத்தியே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மௌஹமட் அலி கூறியுள்ளார்.