யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் காலமானார்.

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் காலமானார்.

யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இறுதிக் கிரியைகள் எதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்த 20 சிங்கள பொலிஸாரை பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றி ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.

1937ஆம் ஆண்டு பிறந்த அவர் 1962ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து, தனது 52ஆவது வயதில் சேவையில் இருந்து ஓய்வு பெற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 4273 Mukadu · All rights reserved · designed by Speed IT net