மது குடித்த அளவை அறிந்துகொள்ளும் இயந்திரம் கண்டுபிடிப்பு

உடலில் மதுபானம் கலந்துள்ள அளவை அறிந்துகொள்ளும் இயந்திரம் கண்டுபிடிப்பு

உடலில் மதுபானம் கலந்துள்ள அளவு தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொழிநுட்பத்திலான இயந்திரம் ஒன்றை மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

இவர் எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தசுன் சத்சர செனரத் என்ற மாணவரே இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

நவீன ஆர்னோட் தொழிநுட்பம் வாயிலாக குறித்த மாணவர் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளார்.

குறித்த கருவியினை இயங்க செய்ததன் பின்னர் வாய்க்கு அருகில் கொண்டு சென்று பரிசோதனைக்குட்படுத்தவுள்ள நபரை சில நொடிகள் சுவாசிக்க செய்தால் அந்த நொடியிலேயே கருவியானது பெறுபேற்றினை தந்துவிடும்.

இதற்கமைய, குறித்த கருவியில் மதுபானத்தின் அளவு 300 இற்கு குறைவாக காண்பித்தால் அவர் மதுபானம் அருந்தவில்லை என்பதோடு, 300 முதல் 500 வரை காண்பித்தால் அவர் ஏற்கனவே மது அருந்தியவர் எனவும், 500 முதல் 800 வரை காண்பித்தால் சோதனைக்குட்படுத்தும் அந்த சந்தரப்பத்தில் அவர் மது அருந்தியுள்ளார் எனவும் கருவியானது காண்பித்து விடும்.

இந்த கருவிக்கு 24 மணிநேரம் மின் சேமிப்பு மின்கலம் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு மின்னேற்றியினூடாக மின்னேற்றக்கூடிய வசதியினையும் குறித்த மாணவர் இணைத்துள்ளார்.

அவரால் தயாரிக்கப்பட்ட குறித்த கருவியின் மற்றும் அவர் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரின் புகைப்படங்கள் கீழே காணப்படுகின்றன.

Copyright © 0407 Mukadu · All rights reserved · designed by Speed IT net