யாழில் குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழில் குற்றவாளியைத் தப்பவிட்ட பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்.நாவாந்துறையில் இளம் பெண் கடத்தப்பட்டமை தொடா்பில் நீதியைவேண்டி நாவாந்து றை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனா்.

நாவாந்துறை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் இளம் பெண் ஒருவரை கடத்த முய ற்சித்த நிலையில் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்,

குறித்த நபா் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தாா்.

இந்நிலையில் பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபா் எங்கே? எனக்கேட்டும், பொலிஸாா் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனா் எனக்கேட்டும் பொதுமக்கள்

போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன்போது “எம் பிள்ளைகளின் எதிா்காலம் என்ன..?”, “சிறுவா், பெண்கள் துஸ்பிரயோகம் தமிழ் இனத்துக்கு மட்டுமா..?” என்பனபோன்ற கோஷங்களை எழுதியவாறும், பதாகைகளை தாங்கியவாறும் ஆா்ப்பாட்டில் ஈடுபட்டனா்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net