1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி.

1,950 மில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி.

யாழ்ப்­பா­ணம், பலாலி விமானநிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் ஆயிரத்து 950 மில்­லி­யன் ரூபா செல­வில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை வான் படை­யி­னர் இந்­தப் பணி ­களை மேற்­கொள்­ள­வுள்­ள­னர். அத்துடன் இதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதத்­துக்­குள் முதல் கட்ட அபி­வி­ருத்­திப் பணி­கள் முடி­வ­டைந்து பலா­லி­யி­லி­ருந்து தமி­ழகத்­துக்­கான விமான சேவை­கள் ஆரம்­ப­மா­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

சிவில் விமானப் போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளம் அதற்­கான பணி­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தது.

ஒக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி நாட்­டில் ஏற்­பட்ட அர­சி­யல் சூழ்ச்­சியை அடுத்து இந்­தப் பணி­கள் கிடப்­பில் போடப்­பட்­டன.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த டிசம்­பர் மாதம் 16 ஆம் திகதி தலைமை அமைச்­ச­ராக மீண்­டும் பத­வி­யேற்­ற­தைத் தொடர்ந்து பலாலி விமான நிலைய அபி­வி­ருத்­திப் பணி­கள் மீள ஆரம்­பிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டன.

அந்­தப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான அமைச்­ச­ர­வைப் பத்­தி­ரம், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் வடக்கு அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சால் முன்­வைக்­கப்­பட்­டது. அதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net