கீரிமலை மஹிந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்!

கீரிமலை மஹிந்த மாளிகை சுற்றுலா அமைச்சிடம்!

வலி.வடக்கு கீரிமலை உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மஹிந்தவின் மாளிகையினை மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா அமைச்சு பொறுப்பேற்கவுள்ளது.

கீரிமலையில் அமைக்கப்பட்டு தற்போது கடற்படையினர் வசமுள்ள மாளிகையினையே சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்குமாறு மைத்திரி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே 2015ஆம் ஆண்டு மைத்திரி யாழ்.வருகை தந்திருந்த வேளை அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்த மாளிகையினை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க கோரியிருந்தார்.

ஆனால் அது பற்றி வாயே திறக்காதிருந்த இலங்கை அரசு தற்போது மத்திய அரசின் கீழுள்ள சுற்றுலா அமைச்சு பொறுப்பேற்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கடற்படையினர் வசமுள்ள கீரிமலைப் பிரதேசம் தொடர்பில் ஆரயப்பட்டவேளையில் அங்கே அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளட்ட பிரதேத்தினை முழுமையாக விடுவித்து அதில் மாளிகையினை மட்டும் சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிப்பதற்கும் எஞ்சிய நிலத்தினை நிலத்தின் உரிமைநாளர்களிடம் கையளிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 100 ஏக்கர் விஸ்திரனம் கொண்ட இந்த மாளிகையினை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியிருந்தது.எனினும் அதுவும் வழமை போலவே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net