ஜனாதிபதியிடம் குற்றவாளிகளின் பெயர்கள் இருந்தும் வெளியிட மறுப்பது ஏன்?

ஜனாதிபதியிடம் குற்றவாளிகளின் பெயர்கள் இருந்தும் வெளியிட மறுப்பது ஏன்?

பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும் கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

பாரிய நிதி மோசடி மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம்? ஆணைக்குழு தயாரித்த இந்த அறிக்கையின் பலன் என்ன ?

குற்றங்கள் கண்டறிய ஆணைக்குழு அமைத்து ஆணைக்குழு நேரத்தை கடத்த அரச நிதியை வீணடித்து இறுதியில் எந்த பலனும் இல்லையென்றால் இவற்றை ஏன் நாம் செய்கின்றோம்.

குற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் உள்ளன, பல குற்றங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அறிக்கையாக ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இப்போது இவற்றை குப்பைத்தொட்டியில் போட முடியாது.

இந்த ஆணைக்குழுக்களுக்கும், அதன் அறிக்கைகளுக்கும் என பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமும், பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது.” என கூறினார்.

Copyright © 9365 Mukadu · All rights reserved · designed by Speed IT net