யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொன்றாகும்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்து உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொன்றாகும்- கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு.

இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வாழ்த்துச் செய்தி தொடர்பான கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு.

இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது குறித்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

“யாழில் அமைதிப்படையாக இராணுவம் தமிழ் மக்கள் உண்மையான சுதந்திரத்தை போருக்குப் பின்னர் அனுபவித்து வருகின்றனர்” என்ற
இவரது கருத்து யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொன்றாகும்.

தொடர்ந்தும் தமிழர் தாயகத்தில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கான வெளிப்பாட்டின் செய்தியாகும்.

சுதந்திரம் பற்றிய நவீன சிந்தனைகள் கொள்கைகளின் உள்ளார்ந்த உணர்வுகளை தத்துவங்களை ஏற்றுக்கொள்ளாததன் ஒரு குறியீடாகவே இவரது வாழ்த்துச் செய்தி அமைந்திருக்கின்றது.

2009 இற்கு முற்பட்ட யுத்த சூழலிலும் மக்களின் சுதந்திரம்
பறிக்கப்படவில்லை. இவர் குறிப்பிட்ட முப்பது வருட காலத்தில் தமிழ் மக்களின் வாழ்வு சிறப்புற்றிருந்தது.

அவர்களது சுதந்திரம் கௌரவம் என்பன பாதுகாக்கப்பட்டிருந்தது.
தமிழ் மக்கள் தாங்கள் அனுபவித்த சுதந்திரத்தையும் கௌரவத்தையும் 2009 இற்குப் பின்னர் படிப்படியாக இழந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும்.

தமது தாயக பூமியில் தமது குடியியல் சுதந்திரம் அரசியல் சுதந்திரம் பொருளாதார சுதந்திரம் சமுதாயச் சுதந்திரம் தேசியச் சுதந்திரம் மற்றும் இயற்கைச் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஓர் இனமாக
தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இதில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணியாக இராணுவம் உள்ளது. யுத்தம் முடிவுற்று புத்தாண்டுகள் ஆகியும் தமது பூர்வீக நிலத்தில் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலையில் இராணுவத்தினர் அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துள்ளனர்
எப்பதே உண்மையாகும்.

யுத்தத்திற்கு பிற்பாடு வெள்ளைவான் கடத்தல்களும் காணாமல் ஆக்கப்படுதலும், கொலைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் தமிழ் மக்கள்
மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதனை தமிழ் மக்கள் மறக்கவில்லை.

தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்பின் வடிவாமாக பௌத்த விகாரைகளை
இராணுவம் அமைத்தனை தமிழ் மக்கள் மறக்கவில்லை.

இவ்வாறனதொரு புறச் சூழலில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் சுதந்திர தின
வாழ்த்துச் செய்தி யதார்த்தமற்ற உண்மைக்குப் புறம்பான மிகவும் வர்ணிக்கப்பட்டதொரு வாழ்த்துச் செய்தியாகும்.

என்பதனை கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு சுட்டிக்காட்டுவதுடன் அச் செய்தியினை முற்றாக மறுத்து இம் மறுப்பு அறிக்கையினை
வெளியிடுகின்றோம்.

Copyright © 4736 Mukadu · All rights reserved · designed by Speed IT net