1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்!

1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்!

டெல்லியில் ஒரு வயது பச்சிளம் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் அயல்வீட்டிலிருந்த குறித்த நபர், இனிப்பு தருவதாக ஏமாற்றி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கட்டிவைத்து துஷ்பிரயோம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

டெல்லி ஜே.ஜே. கொலனியைச் சேர்ந்த தர்மேந்தர் என்ற நபர், அங்கு இனிப்புக்கடை வைத்துள்ளார்.

தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் குடும்பத்தாருடன் அவர் நெருங்கி பழகியுள்ளார். அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். எனினும், ஒரு மணிநேரம் ஆகியும் குழந்தை வீட்டுக்கு வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த தாய், தர்மேந்தரின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, குழந்தையின் கழுத்தில் கயிறு சுற்றப்பட்டும், கைகள் கட்டப்பட்டும் நடுக்கத்துடன் குழந்தை மயங்கிக் கிடந்துள்ளது.

குழந்தையின் நிலையை பார்த்து பதற்றமடைந்த தாய், குடும்பத்தினரின் உதவியுடன் மகளை அருகிலுள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதன்பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net