கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் – ஆளுநர் துரித நடவடிக்கை!

கிளி. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் – ஆளுநர் துரித நடவடிக்கை!

கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நடவடிக்கை எடுத்துள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை, வடக்கு மாகாண முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கைதடியில் உள்ள வட.மாகாண முதலமைச்சர் காரியாலையத்தில் சந்தித்து உரையாடியிருந்தார்.

அதன்பின்னர் இந்த சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபடும் பொலிஸார் அசமந்த போக்குடன் செயற்படுவது தொடர்பாகவும், கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net